NET தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு…!
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட CSIR UGC NET தேர்வு, வருகின்ற நவம்பர் 19, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் பின்னர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் வெளியானதும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.
1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை csirnet.nta.nic.in இல் பார்வையிடவும்
2. முகப்புப்பக்கத்தில், “CSIR UGC NET ஹால் டிக்கெட் 2020” என்று எழுதப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்க.
3. திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும்.
4. உங்கள் login and password கொடுக்கவும்.
5. பின்னர், ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
6. பின் ஹால் டிக்கெட் பதிவிறக்கி கொள்ளவும்.