இந்தியாவில் 14 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று!
இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் தற்பொழுது மீண்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உலக அளவில் அதிக பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் தாக்கமே குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது புதிதாக உருவெடுத்து மேலும் அதிகமான பாதிப்பு கொண்ட நோயை பரப்புகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை விட தற்போது உருவாகியுள்ள புதிய வைரஸ் 70 சதவீதம் அதிகமாக பரவக் கூடியது எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 20 பேர் கொரோனா வைரஸால் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் புதிதாக 14 பேர் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் டெல்லியிலும், 7 பேர் பெங்களூருவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக கொரானா வைரஸ் தொற்றை கொண்டுள்ள நபர்கள் அனைவருமே ஐரோப்பாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 6 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பாதிப்பை கொடுத்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில், புதிய கொரோன வைரஸின் தாக்கம் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.