இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் திறன்கொண்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் இரட்டை பிரிவு கொண்ட உருமாறிய கொரோனா வைரஸை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் திறன் கொண்டதாகும். இந்த புதிய வைரஸானது ‘பி.1.618’ என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் பிறழ்வு வைரஸ் என்று அழைக்கப்படும், ‘பி.1.617’ என்ற வைரஸில் இருந்து மாறுபட்டதாகும்.
இந்த வைரஸ் குறித்து டெல்லி சி.எஸ்.ஐ.ஆர்.மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறுகையில், ‘இந்த வைரஸை கண்டு அலறவேண்டாம். நிலையான பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது போதுமானது’ என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வைரஸ் ஆனது முதன்மையாக இந்தியாவில் காணப்பட்டாலும், இது அமெரிக்கா சிங்கப்பூர் சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…