புதிய C.B.I இயக்குநர் தேர்வு….24ஆம் தேதி மோடி தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம்…!!
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை மத்திய கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.கடந்த 6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்க பட்டது.அதில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா_வை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.இதன் பின் அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பதவியேற்ற அலோக் வர்மா_வை . அப்பதவியில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு பதவி நீக்கம் செய்தது.இந்நிலையில் புதிய C.B.I தேர்வு செய்யும் உயர்நிலைக்குழு வரும் 24ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகின்றது.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் பங்கேற்பார்கள்.