புதிய கட்டடங்கள் மட்டுமே வளர்ச்சி இல்லை. நாட்டின் உட்கட்டுமானம் முக்கியம். – குடியரசு தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.
74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லில் குடியரசு தலைவர் கொடியேற்றியது போல, மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள், ஆளுநர் மாளிகையில் கொடியேற்றினார்கள்.
முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிப்பு : அதே போல, தெலுங்கானாவில் குடியரசு தினவிழா ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.
ஆளுனர் தமிழிசை பேச்சு : இது குறித்து செய்தியாளர்களிடம் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை கூறுகையில், ‘ தெலுங்கானா அரசு புதிதாக புறக்கணித்தால் பரவாயில்லை. புறக்கணிப்பு என்பது அவர்களுக்கு வழக்கமாக மாறிவிட்டது. எனக்கு இது புதுசாக தெரியவில்லை. தெலுங்கானா அரசு குடியரசு தின விழாவை குறைத்து மதிப்பிட்டு அரசாங்க விழாவாக நடத்தாமல் அரசாங்கத்தில் இருந்து எந்த அறிவிப்பும் வராமல் அவர்களும் கொடியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். நீதிமன்றமும் மிகக்டுமையான தனது கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேடையில் பேசுகையில், ‘ புதிய கட்டடங்கள் மட்டுமே வளர்ச்சி இல்லை. நாட்டின் உட்கட்டுமானம் முக்கியம் என பேசினார். தெலுங்கானா அரசு தற்போது புதிய சட்டமன்றத்தை கட்டியுள்ளதை குறிப்பிட்டு ஆளுநர் பேசினார் என ஒரு தரப்பு கூறி வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…