பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்…தாய்க்கு நெட்டிவ் – அதிர்ச்சியில் பெற்றோர் !
வாரணாசியில் புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் பேரதிர்ச்சியில் பெற்றோர்.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் கொரோனா 3 வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் வாரணாசியில் 32 வயதான தொழிலதிபர் அனில் பிரஜாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவரது மனைவி சுப்ரியா மே 24 அன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் ஆர்.டி.-பி.சி.ஆர் மூலம் கொரோனா சோதனை செய்யப்பட்டன. அதில் சுப்ரியாவிற்கு கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தது.
மேலும் மே 25 அன்று அவர் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், குழந்தை எங்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே குழந்தையின் மாதிரி ஆபரேஷன் தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டது, அதில் புதிதாக பிறந்த குழந்தையின் கொரோனா சோதனை பாசிட்டிவ் என வந்து எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
இது கவலை அளிப்பதாகவும், தங்களால் பரிசோதனை ரிப்போர்ட்டை நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பெற்றெடுத்த குழந்தை நலமாகவே கொரோனா நெகட்டிவுடன் பிறந்துள்ளது, ஆனால் தற்போது வாராணாசியில் பிறந்த இந்த குழந்தையோ புதுவிதமாக பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.