மோடி, அமித்ஷாவுக்கு அமெரிக்காவில் தடை…!!!குடியுரிமை சட்டதிருத்தத விவகாரத்தின் விளைவு…!!!
- தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த, சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரித்துள்ளது.
- இந்த குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ மத்திய அரசை நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த 1998ல் உருவாக்கப்பட்ட இந்த அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம், வெளிநாடுகளில் நடக்கும் மத சுதந்திர விதிமீறல்களை ஆய்வு செய்து, அதற்கான பரிந்துரைகளை அமெரிக்க அதிபர், வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வழங்கும். இந்தியாவில் 2002 ஆண்டு நிகழ்ந்த கோத்ரா வன்முறையை தொடர்ந்து, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட வேண்டும் என 2005ல் பரிந்துரைத்தது இந்த ஆணையம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.