இன்று மாலை 4 மணிக்கு புதிய அறிவிப்புகள் வெளியீடு.!

Default Image

3-ஆவது நாளாக இன்றும் ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுக்கவுள்ளார்.

பிரதமர் மோடிகடந்த 2 நாள்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார்.

இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி  அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 3-ஆவது நாளாக இன்றும் ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து விளக்கம் கொடுக்கவுள்ளார்.

முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான அறிவிப்புகள் வெளியிட்டார். நேற்று வேளாண்த்துறை மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்