மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்கும் நெட்டிசன்கள்…! என்ன காரணம்…?

Default Image

சச்சின் மீது ஆத்திரமடைந்த ரசிகர்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக, மரிய ஷரபோவாவிடம், நெட்டிசன்கள் மன்னிப்பு கோரியும் வருகின்றனர். 

கடந்த 2015ஆம் ஆண்டில் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, சச்சின் டெண்டுல்கரை தனக்கு யார் என்று தெரியாது எனக் கூறியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த சச்சினின் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சச்சின் மீது ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரை கடுமையாக சமூகவலைதளத்தில் விமர்சித்து வருவதோடு,  தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக, மரிய ஷரபோவாவிடம், நெட்டிசன்கள் மன்னிப்பு கோரியும் வருகின்றனர். அவரிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல், கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு வர வேண்டும் என்றும்,  கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின் திருச்சூர் பூரம் பண்டிகைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரிடம் மன்னிப்பு கேட்டதை பார்த்த  மரியா ஷரபோவா யாருக்கேனும் ஆண்டுகள் பற்றி ஏதேனும் குழப்பம் வந்துவிட்டதா?’ என கேட்டுள்ளார். இந்நிலையில் மரியா ஷரபோவா வின் பேஸ்புக் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள கருத்தில், ‘மன்னித்துக்கொள் மரியா. நீங்கள் பெரிய லெஜெண்ட். சச்சினை எங்களுக்கு வீரராக தான் தெரியும். ஆனால் ஒரு மனிதராக தெரியாது. நீங்கள் சரியாகத்தான் கணித்து உள்ளீர்கள். உங்களை தவறாகப் பேசியதற்கு மன்னிக்கவும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்