நேபாளம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் ஒருவர் காயம்.
இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக, எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் சற்று மனக்கசப்புடன் காணப்படுகிறது. இந்தியாவின் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியபகுதிகளை நேபாளம் உரிமைக்கோரி வருகிற நிலையில், இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேபாள போலீசார், இன்று அத்துமீறி கிருஷ்ணகஞ் மாவட்டத்தை சேர்ந்த சிலரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு இருநாட்டு எல்லை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…