கூகுளின் துணை நிறுவனமாகிய வேஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நேஹா பரிக் நியமனம்!

கூகுளின் துணை நிறுவனமாகிய வேஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நேஹா பரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
185 க்கும் மேற்பட்ட நாடுகளில் 140 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண்மணி நேஹா பரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 41 வயதான வேஸியின் தலைமை நிர்வாக அதிகாரி நோம் பார்டின் பதவியிலிருந்து விலகிய நிலையில் தற்பொழுது ஹாட்வைர் எனும் பயண வலைதளத்தின் முன்னாள் தலைவரான நேஹா பரிக் அவர்கள் தற்பொழுது வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கூகுளின் துணை நிறுவனமான வேஸை 2013 ஜூன் மாதத்தில் 966 மில்லியன் டாலர்களுக்கு கூகுள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.