ரயில் பயணத்தால் நீட் தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது.
இதில் கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் என்கிற ரயில், காலை 7மணிக்கு வராமல் மதியம் 2 மணிக்கு மேல்தான் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதனால் இதில் பயணம் செய்த 100 மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.
இதனை குறிப்பிட்டு,கர்நாடக முதல்வர் குமாரசாமி, ரயில்வே துறை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மனித வள மேம்பாட்டு துறை பிரகாஷ் ஜவடேகர் , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து பேசி மாணவர்களின் நலனை கொண்டு சுமூக முடிவை எட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.
இதுகுறித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது டிவிட்டர் பக்கத்தில், ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
DINASUVADU