#NEET2022:மாணவர்களே…ஜூலை 17 நீட் தேர்வு;இன்று முதல் ஹால் டிக்கெட் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Published by
Edison

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது.

அதன்படி,அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய,பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் தனது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

NEET UG 2022 ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்:

  • முதலில் NEET NTA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
  • அதன்படி,முகப்புப் பக்கத்தில்,“NEET UG 2022 அட்மிட் கார்டைப் பதிவிறக்கு(Download NEET UG 2022 Admit Card)” என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.
    அங்கு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
  • உங்கள் NEET UG 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.
    அப்போது,அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

6 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

7 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

8 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

8 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

9 hours ago