#NEET2022:மாணவர்களே…ஜூலை 17 நீட் தேர்வு;இன்று முதல் ஹால் டிக்கெட் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது.
அதன்படி,அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய,பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் தனது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
NEET UG 2022 ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்:
- முதலில் NEET NTA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
- அதன்படி,முகப்புப் பக்கத்தில்,“NEET UG 2022 அட்மிட் கார்டைப் பதிவிறக்கு(Download NEET UG 2022 Admit Card)” என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.
அங்கு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும். - உங்கள் NEET UG 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.
அப்போது,அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.