இந்தியா முழுவதும் 260 க்கும் மேற்பட்ட நகரங்களில் நீட் முதுகலை தேர்வு 2021 இன்று தொடங்கியுள்ளது.
முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான நீட் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை என்பிஇ (National Board of Examinations) எனப்படும் தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் முதுகலை தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இது பற்றிய கூடுதல் தகவல்களை ntaboard.edu.in என்ற இணையதளத்தில் அறியலாம். நீட் முதுகலை தேர்வு இந்தியா முழுவதும் 260 க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்படும் என்றும் 800 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் முகக்கவசம், சானிடைசர் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படும் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும். NEET PG அட்மிட் கார்டு ஏற்கனவே NBE-ஆல் செப் 6 அன்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 18 அன்று நடத்தப்படவிருந்த தேர்வுக்கு NBE வழங்கிய முந்தைய அட்மிட் கார்டு செல்லாது என்றும் இந்த ஆண்டு, நீட் பிஜி தேர்வுக்கு 1,75063 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முதுகலை தேர்வில் 200 MCQ கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 25% எதிர்மறை மதிப்பெண் இருக்கும். இருப்பினும், முயற்சிக்கப்படாத பதில்களுக்கு எந்த மதிப்பெண்ணும் கழிக்கப்படாது. இப்போதைக்கு, நீட் பிஜி முடிவு 2021 அறிவிப்பு குறித்து எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை.
பொதுப் பிரிவின் தேர்வர்களுக்கு தேர்வில் தகுதி மதிப்பெண்கள் 50 சதவிகிதம் ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இது 40 வது சதவிகிதம். மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்வதற்கோ அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கோ எந்த கோரிக்கையும் NBE மூலம் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…