இளங்கலை மருத்துவ மற்றும் பல் படிப்புகளில் சேருவதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட் 2021) ஆகஸ்ட் 1, 2021 அன்று 11 மொழிகளில் நடைபெறும் என்று என்.டி.ஏ இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டைப் போல கோவிட்-19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க்கப்படும்.தேர்வானது ஒரு முறை பேனா மற்றும் காகிதத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நீட் (யுஜி), 2021, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின் படி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பம்ஸ் மற்றும் பி.எச்.எம்.எஸ் படிப்புகளில் சேருவதற்காக என்.டி.ஏ ஆல் நடத்தப்பட உள்ளது.
கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஒரு அறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடுமையான முன்னெச்சரிக்கைகளுக்கு மத்தியில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில் 13.66 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.அதில் 7,71,500 மாணவர்கள் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
தேர்வில் கலந்துகொள்வதற்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிர் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. தேர்வு எழுதுபவர்கள் 10 + 2 வகுப்புகளில் ஆங்கிலத்துடன் கணிதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமும் இருக்க வேண்டும்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…