மாணவர்கள் கவனத்திற்கு…திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Default Image

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS,BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய நிலையில்,விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில்,ஜூலை 17 ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.குறிப்பாக,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு இடையில் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வுகளுக்கும் அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,தேசிய தேர்வு முகமை மூன்று பெரிய நுழைவுகளை நடத்துகிறது.அதன்படி,பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-UG (CUET-UG) ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரையிலும்,தேசிய தகுதி மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) ஜூலை 17 ஆம் தேதியும் மற்றும் பொறியியல் மற்றும் கட்டிடக்கலை திட்டங்களுக்கான கூட்டு நுழைவுத்(ஜேஇஇ-மெயின்)தேர்வு ஜூலை 17 முதல் ஜூலை 21 ஆம் தேதி வரையிலும் ஒரே காலகட்டத்தில் நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில்,நீட் தேர்வை ஒத்திவைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,ஜூலை 17 ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.மேலும்,ஜூலை 15 ஆம் தேதி CUET-UG தேர்வும்,ஜூலை 21 ஆம் தேதி JEE மெயின் தேர்வும் நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்