கொரோனா மத்தியில் இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு..!
MBBS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக NEET தேர்வு நடைபெறுகிறது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை வைத்தால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என கூறி நீட் தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால்,மத்திய அரசு திட்டவட்டமாக குறிப்பிட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்தது. இதனால், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் NEET தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15,97,433 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 238 தேர்வு மையங்களில் இருந்து 1,17,990 மாணவ, மாணவிகள் எழுதஉள்ளனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் நேற்று நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.