#Breaking: நீட் தேர்வு முடிவுகள் அக்.16 ஆம் தேதி வெளியாகும்!
கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுக்கு, அக்.16 ஆம் தேதி வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள்.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சிலர் தேர்வு எழுத முடியாமல் போனது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்தி, முடிவுகளை 16 ஆம் தேதி வெளியிட வேண்டுமெனவும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள், இம்மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் எனவும், அதற்கான நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
.@DG_NTA will be declaring the results of #NEETUG 2020 on 16th October 2020. Exact timing of the results will be intimated later. I wish all the best to the candidates. #NEETResult2020 #NEETRESULTS
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) October 12, 2020