ராஜஸ்தானில் ரூ.35 லட்சத்திற்கு நீட் வினாத்தாள் கசிவு .. மாணவி உட்பட 8 பேர் கைது..!

Default Image

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு மாணவி உள்பட 8 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் 3800 -க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16.14 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக, நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன. இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (RIET) கல்லூரியில் நடந்த நீட் தேர்வு மையத்தில் இருந்து நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு மாணவி உள்பட 8 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 லட்சம் பணம் மீட்கப்பட்டது.

நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்ற போது வினாத்தாளை கசிவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க நான்கு போலீஸ் குழுக்கள் அமைத்து ஒரு மாணவி உள்பட 8 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராம் சிங் தனது அறிமுகமான நவரத்னா என்பவர் பன்சூரில் ஒரு அகாடமி நடத்துகிறார். அவரது நண்பர் அனில் யாதவ் இ-மித்ரா நடத்துகிறார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் சுனில் யாதவின் உறவினர் பெண் தான் தனேஸ்வரி. இவரின்  நீட் தேர்வு மையம் தான் ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (RIET) கல்லூரி ஆகும்.

நீட் வினாத்தாளை அனுப்புவதற்கு ரூ.35 லட்சம்  இவர்களுக்குள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால், தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ராம்சிங் தேர்வு மைய நிர்வாக பொறுப்பில் இருந்த முகேஷ் ஆகியோர் நீட் வினாத்தாளை வாட்சப் மூலம்  சித்ரகூத் பகுதியில் உள்ள இருவருக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அந்த வினாத்தாளை  சிஹாரில் உள்ள சிலருக்கு அனுப்பி அதற்கான விடைகளை பெற்று பின்னர்  ராம்சிங்கிற்கு அனுப்பி அதன் மூலம் தினேஷ்குமாரி சரியான விடைகளை எழுதியுள்ளார் என்பது தெரியவந்தது.

தனேஸ்வரியின் மாமா ரூ.10 லட்சத்தை தேர்வு அறையின் வெளியே காரில் அமர்ந்திருந்தபோது போலீசார் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்