நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரி எஸ். ஏ. பாப்டேவிற்கு மாணவர் கடிதம்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், மத்திய அரசு 4-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜே.இ.இ. (மெயின்) தேர்வு மற்றும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகளை ஓத்திவைக்கக்கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் நாளை முதல் 6-ம் தேதி வரை திட்டமிட்ட நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டேவிற்கு 17 வயது மாணவன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பிரச்சனை மற்றும் நாடு முழுவதும் மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு இத்தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மாணவர் மனுவில் தெரிவித்துள்ளார்.