NEET-JEE தேர்வர்கள் தங்கள் உடல்நலம், எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள் – ராகுல் காந்தி
நீட், ஜேஇஇ தேர்வு பற்றி அனைவரும் ஏற்கும் வகையிலான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் – ராகுல் காந்தி
மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது. பின்னர் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் எழுத உள்ள மாணவர்கள் தங்களது உடல் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து கவலை கொள்கிறார்கள். அது அவர்களின் நியாயமான ஒன்றுதான் என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் நீட், ஜேஇஇ தேர்வு பற்றி அனைவரும் ஏற்கும் வகையிலான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அசாம் மற்றும் பீகாரில் கனமழை காரணமாக வெள்ள அபாயம் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
NEET-JEE aspirants are worried about their health & future.
They have genuine concerns of:
– fear of Covid19 infection
– transport & lodging during pandemic
– flood-mayhem in Assam & Bihar.GOI must listen to all stakeholders & find an acceptable solution.#AntiStudentModiGovt
— Rahul Gandhi (@RahulGandhi) August 26, 2020