இன்று நடைபெறுகிறது “நீட் தேர்வு”.. தேர்வறைக்குள் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள், மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுகள் தேசிய அளவில் இன்று நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதுமட்டுமின்றி, நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
நீட் தேர்வு:
இந்தநிலையில், கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதற்காக 3,842 தேர்வு மையங்கள் தாயாராக உள்ளது. இந்த நீட் தேர்வினை 15,97,433 பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், அதில் மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுத்தவுள்ளனர்.
தேர்வு நேரம்:
நீட் தேர்வு, நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும், மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என தேசிய தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை:
தேர்வு மையத்திற்குள் நுழையும் மாணவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை நடத்திய பிறகே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கிருமி நாசினி, குடிநீர் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வறைக்குள் எடுத்து செல்ல வேண்டியவை:
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வறைக்கு தங்களின் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, குடிநீர் பாட்டில் (Transparent water bottle) , பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (விண்ணப்ப படிவத்தில் ஒட்டப்பட்ட), முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை, முகத்தை மறைக்கும் ஷில்ட போன்ற பொருட்களை மாணவர்கள் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இந்த ஆடைகள் அணிந்து செல்ல வேண்டும்:
மாணவர்கள், ஜீன்ஸ் பேண்ட், டிரவுசர், டி-சர்ட், சட்டை ஆகிய ஆடைகளை அணிந்து வருமாறும், மாணவிகள் சல்வார், ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனைவரும் செருப்பு அணிந்து வருமாறும், கட்டாயமாக ஷூ அணிந்து வரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
அதிலும், பெரிய பட்டன் கொண்ட சட்டை, முழுக்கை சட்டை, போன்ற வகையான சட்டைகளை அணிந்து வரக்கூடாது எனவும், நகைகள் அணிந்து வரக்கூடாது என தெரிவித்தது. மேலும், வாட்ச் அணிந்து வரக்கூடாது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஆள்மாறாட்டத்தை தடுக்க:
கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகள் நடைபெற்ற வந்த நிலையில், அதனை தடுக்க தேர்வர்களின் ஆதார் எண் விபரங்கள் சோதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.