பல சர்ச்சைகளுக்கு இடையே, இன்னும் சில நேரங்களில் நீட் தேர்வுகள் தொடங்கவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வர்கள் அனைவரும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்துள்ள நிலையில், பலரும் அதிருப்தி அடைந்தனர்.
இந்தநிலையில், கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதவுள்ளனர். தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், அதில் மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுத்தவுள்ளனர்.
இந்த தேர்வெழுதும் வெளியூர் மாணவர்கள் பலர், காலை முதலே தேர்வு மையத்தில் கூடினார்கள். சென்னையில் 45 மையங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளதாகவும், அதனை 22,500 பேர் எழுதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை கொட்புரம் IIT வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு நடத்தினார்.
தமிழகத்தில் பல நகரங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 மணிக்கு மேல் மாணவர்கள் அனைவரும் பேட்ச் வரிசையாக தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர். ஆனால் தேர்வு மையத்திற்குள் உணவு பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பசியுடன் எப்படி தேர்வு எழுதுவார்கள் என பெற்றோர்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தேர்வு மையத்திற்குள் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு, 2 மீட்டர் இடைவெளி விட்டு, வட்டம் போட்டு தேர்வர்களை நிறுத்தி அவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்ட பொருட்களை பரிசோதித்து, நீளமான கைகளை கொண்ட மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பின்னே தேர்வறைக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…