NEET இன் முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் ‘நீட்’ என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வை ‘நீட்’ ஆகஸ்ட் 01 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் நீட் தேர்வு செப்டம்பர் 12, 2021 அன்று நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 16 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இந்நிலையில், NEET UG 2021 இன் முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in முடிவைப் பார்க்கலாம். தெலங்கானாவைச் சேர்ந்த மிருணால் குட்டேரி, டெல்லியைச் சேர்ந்த தன்மய் குப்தா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கார்த்திக் ஜி நாயர் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். மூவரும் ஒரே மாதிரியான 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்-ஆக்ராவைச் சேர்ந்த நிகர் பன்சால் அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவர் பிரவீன் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அர்ச்சித்தா என்ற மாணவியை 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…