இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு.!
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
தேசிய தேர்வு முகமையானது(NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்(NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
499 நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும். இதில், நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 499 நகரங்களில் உள்ள வெவ்வேறு மையங்களில் இன்று நடைபெற உள்ளது. ஆனால், வன்முறை காரணமாக மணிப்பூரில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.