நீட் தேர்வு ரத்து,மாதந்தோறும் ஏழைக்குடும்பங்களுக்கு ரூ.6000!ராகுல் காந்தி வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை
இன்று மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சியாக அறிவித்து வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்து வந்தனர்.
இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.இந்த நிகழ்ச்சியின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் .பா.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கை 55 பக்கங்கள் கொண்டது ஆகும்.அதில் இடம்பற்றுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து பார்ப்போம்..
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:
- மாதந்தோறும் ஏழைக்குடும்பங்களுக்கு நியாய் (NYAY) திட்டத்தின் கீழ் ரூ. 6000 வழங்கப்படும்.
- விவசாயிகள் வாங்கிய கடனை திரும்பி அவர்கள் செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
- நிச்சயமாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
- இந்தியாவில் நிச்சயமாக 2030-ஆம் ஆண்டுக்குள் வறுமை ஒழிக்கப்படும்.
- நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படும்.நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது.நீட் தேர்வு மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்துகிறது
- பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பணிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரபேல் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.
- இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனையை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
- அமலில் இருக்கும் ஜிஎஸ்டி திட்டம் ரத்து செய்யப்படும்.
- புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
- அரசுத்துறையில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நீக்கப்படும்.இவ்வாறு காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்றும் அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன்.அதேபோல் நீட் தேர்விற்கு பதிலாக மாநில அளவில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம் என்றும் மாநிலத்தின் விருப்படி மருத்துவ மாணவர்கள் தேர்வு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.