தனக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவு பொருட்களை ஏலத்தில் விடும் நிகழ்வில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி,மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இ-ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது, அக்டோபர் 7 வரை தொடரும்,இன்று ஏலத்தின் மூன்றாவது நாளாகும்,அதன்படி, இதில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் https://pmmementos.gov.in/#/ என்ற இணையதளம் வழியாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனின் குத்துச்சண்டை கையுறைகள் இ-ஏலத்தில் அதிக ஏலத்தைப் பெற்றன. அடிப்படை விலை ரூ. 80 லட்சம் கொண்ட போர்கோஹைனின் கையுறைகள் ரூ.10 கோடிக்கு ஏலம் பெறப்பட்டது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் ஈட்டிக்கு ரூ. 10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஏலத்தில் மற்ற பொருட்களான பாராலிம்பியன் வீராங்கனை அவனி லெகாரா மற்றும் பவானி பட்டேலின் டி-ஷர்ட்கள் அடங்கும்.மேலும்,பிவி சிந்து தனது வெண்கலப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்திய பேட்(racquet) மற்றும் பிற ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களின் பொருட்களும் ஏலத்தின் ஒரு பகுதியாகும்.
ஸ்போர்ட்ஸ் பொருட்கள் தவிர,பிரதமரின் உருவப்படங்கள் மற்றும் புகைப்படங்களுடன் கேதார்நாத் கோவில் மற்றும் ஒற்றுமை சிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பும் இ-ஏலத்தில் அடங்கும்.அதன்படி,மோடியின் புகைப்படம் மற்றும் உருவப்படங்களின் அடிப்படை விலை ரூ. 2 லட்சம் ஆகும்.
மேலும்,இது தொடர்பாக பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”காலப்போக்கில், நான் ஏலத்தில் விடப்பட்ட பல பரிசுகளையும் நினைவுப் பரிசுகளையும் பெற்றுள்ளேன். எங்கள் ஒலிம்பிக் ஹீரோக்கள் கொடுத்த சிறப்பு நினைவுச்சின்னங்களும் இதில் அடங்கும்.எனவே,மக்கள் ஏலத்தில் பங்கேற்கவும்.இந்த வருமானம் நமாமி கங்கே முயற்சிக்கு செல்லும்”,என்று தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில், பிரதமரால் பெறப்பட்ட 4,000 க்கும் மேற்பட்ட பரிசுகளை அரசாங்கம் ஏலத்தில் எடுத்தது.முந்தைய ஏலத்தின் வருமானமும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்கு சென்றது.
நமாமி கங்கே ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சித் திட்டமாகும், இது மத்திய அரசால் ஜூன் 2014 இல் தொடங்கப்பட்டது. இது கங்கை நதியின் மாசு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…