ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம்;உயரத்தில் பறக்கும் மூவர்ண கொடி – வீடியோ உள்ளே …!.!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.அதன்படி,இன்று மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை இன்று வென்றுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. ஏனெனில்,தங்கம் வென்ற நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது விதிமுறை. இவ்வாறு,இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை ஒட்டுமொத்த நாடும் பாராட்டி வருகிறது.

அந்த வகையில்,கர்நாடகாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர்,டாக்டர் கே.சுதாகர் அவர்கள் நீரஜ்ஜை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.

“ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுகிறது மற்றும் இந்தியாவின் மூவண்ணக்கொடி உயரத்தில் பறக்கிறது!

இது நம் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் மற்றும் பொன்னான தருணங்களில் ஒன்றாக இருக்கும். நன்றாக முடிந்தது.
நீரஜ் சோப்ரா ,நீங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

சமந்தாவை அசிங்கப்படுத்திய அமைச்சர்.. பொங்கி எழுந்த மகேஷ் பாபு.!

சமந்தாவை அசிங்கப்படுத்திய அமைச்சர்.. பொங்கி எழுந்த மகேஷ் பாபு.!

சென்னை : தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் விவாகரத்து,…

17 mins ago

நெதென்யாகுவை தீர்த்து கட்டுவோம் ..! மிரட்டல் விடுத்த இரான் உளவுத்துறை!

லெபனான் : இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்துக்கட்ட போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை…

40 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இன்று கனமழை.. அடுத்த 6 நாட்களுக்கும் இருக்கு – வானிலை அலர்ட்.!

சென்னை : தென் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும், ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் எனவும், இதன் காரணமாக தென்…

1 hour ago

தமிழகத்தில் (04-10-2024) வெள்ளி கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

1 hour ago

மாதவிடாய்க்கு முன் முகம் கருக்குதா? காரணங்களும் தீர்வுகளும் இதோ..!

சென்னை -மாதவிடாய் வருவதற்கு  ஒரு வாரத்திற்கு முன் பலருக்கும் முன்  அறிகுறிகள் தென்படும். இதற்கு காரணம் என்னவென்றும் , தீர்வுகளைப்…

2 hours ago

ஈராக்கில் புதிதாகப் பிறந்த 100 குழந்தைகளுக்கு “நஸ்ரல்லா” என்று பெயர் சூட்டல்.!

ஈராக்: ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

3 hours ago