ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம்;உயரத்தில் பறக்கும் மூவர்ண கொடி – வீடியோ உள்ளே …!.!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.அதன்படி,இன்று மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை இன்று வென்றுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. ஏனெனில்,தங்கம் வென்ற நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது விதிமுறை. இவ்வாறு,இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை ஒட்டுமொத்த நாடும் பாராட்டி வருகிறது.
அந்த வகையில்,கர்நாடகாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர்,டாக்டர் கே.சுதாகர் அவர்கள் நீரஜ்ஜை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.
“ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுகிறது மற்றும் இந்தியாவின் மூவண்ணக்கொடி உயரத்தில் பறக்கிறது!
இது நம் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் மற்றும் பொன்னான தருணங்களில் ஒன்றாக இருக்கும். நன்றாக முடிந்தது.
நீரஜ் சோப்ரா ,நீங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
Indian National Anthem playing at the #Olympics and Tricolour???????? flying high!
This will go down as one of the most memorable days and golden moments of our lives. Well done @Neeraj_chopra1! You have made the entire nation proud.#Tokyo2020#CheerForIndia pic.twitter.com/F98Pu9MI9R
— Dr Sudhakar K (@mla_sudhakar) August 7, 2021