நீட், ஜே.இ.இ தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் – மத்திய அரசு திட்டவட்டம் ..!
ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி நடைபெறும் எனவும், நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13 -ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் முதன்மை பொறியியல் மற்றும் மருத்துவப் பள்ளிகளில் சேருவதற்காக நடத்தப்படும் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளின் தேதிகள் மாணவர்களின் கோரிக்கை வைத்த நிலையில் இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்று ஊடகங்களில் செய்தி எழுந்த நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி JEE மற்றும் NEET பொதுவாக ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். ஆனால், கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், JEE Main 2020 மற்றும் NEET 2020 நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை இந்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர், செப்டம்பர் மாதம் நடத்தப்பட தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜேஇஇ (மெயின் ) தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையிலும், ஜேஇஇ(அட்வான்ஸ்) தேர்வு செப்டம்பர் 27 -ம் தேதியும் ,தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) செப்டம்பர் 13 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
— National Testing Agency (@DG_NTA) August 21, 2020