நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கோரி 150 -கல்வியாளர்கள் பிரதமருக்கு கடிதம்.!
நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கோரி 150 -கல்வியாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா காலத்தில் நீட் தேர்வையும்,ஜேஇஇ தேர்வுகளையும் நடத்தவேண்டாம் என்று பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வையும், ஜேஇஇ தேர்வையும் குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்ற முடியுடன் உள்ளது. இதனால், தனது முடிவில் இருந்து தேசிய தேர்வு முகமை மாறுவதாக தெரியவில்லை.
இந்நிலையில், நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் கீழ் இயங்கும் கல்லூரிகளின் 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஆவலுடன் வீட்டிலேயே காத்திருக்கிறார்கள் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜே.இ.இமெயின் மற்றும் நீட் ஆகியவற்றுக்கான தேதிகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால் மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற ஓராண்டு வீணாகிவிடும். நமது மாணவர்களின் கனவுகளையும், எதிர்காலத்தையும் சமரசம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
கல்வியாளர்கள் ‘‘சிலர் அவர்களுடைய அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சிக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். நேற்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துள்ளனர்.