நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், புதுச்சேரி, மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளனர். நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி நீதிமன்றத்தை நாடுவது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது. தற்போது, நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…