நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது.
சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற மறுப்பு தெரிவித்தது. இதனிடையே நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அமைச்சர்கள் மனு தாக்கல் செய்தனர்.அதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ,மகாராஷ்டிரா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநில அமைச்சர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் அரசு கொறடா ஆனந்தராமன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த சீராய்வு மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…