நீட் தேர்வு : மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது – ராகுல் காந்தி

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வலியுறுத்தல்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதற்காக கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கும் பணி தொடங்கி, ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது என்றும், நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.
GOI is blind to students’ distress.
Postpone #NEET exam. Let them have a fair chance.
— Rahul Gandhi (@RahulGandhi) September 7, 2021