10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஆதார் கார்டை ஏன் புதுப்பிக்க வேண்டும்.?
10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் விவரங்களை புதுப்பிக்கபட வேண்டிய அவசியத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய குடிமகனின் தனிமனித அடையாளமாக கருதப்படும் ஆதார் அடையாள அட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகி உள்ள காரணத்தால் அதனை மீண்டும் புதுப்பிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதன் அவசியத்தையும் அதில் கூறியுள்ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் 319 திட்டங்கள் உட்பட 1,100க்கும் மேலான அரசு திட்டங்களை மக்களுக்கு எளிதாக வழங்குவதற்கு ஆதார் கட்டாயமாக கேட்கப்படுகிறது. அதேபோல் வங்கிகள் போன்ற மற்ற நிதி நிறுவனங்கள் அடையாள அட்டையாக ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இப்படி பல தேவைகளுக்கு ஆதார் பயன்படுத்தப்படுவதால் அதனை புதுப்பிக்க வேண்டியது ஆதார் வைத்திருக்கும் இந்திய குடிமகனின் நலன். எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரை புதுப்பித்து வைப்பதால் நமக்கு தேவையான வங்கி-நிதி நிறுவன சேவைகள், அரசு திட்டங்கள் போன்ற செயல்பாடுகள் எளிதாக விரைவாக செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக கைரேகை புகைப்படம் உள்ளிட்டவை பத்து ஆண்டுகளில் சிறு சிறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். முகவரி மாறியிருக்கலாம். அது தற்போது புதுப்பிக்கப்படும் போது நமக்கு தேவையான சேவைகள் எளிதாக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு இ-ஆதார் இணையதளம் மூலமாகவும் அல்லது ஆதார் சேவை மையத்திற்கு சென்றோ அதற்கான ஆவணங்களை கொடுத்து தங்களது அடையாளம் மற்றும் முகவரி ஆகியவற்றை தற்போது ஏற்றவாறு புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.