#Breaking: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது!
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடைபெற்ற நீட் தேர்வுகளின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள்.
மேலும், நீட் தேர்வு முடிவுகளை அக்.16 ஆம் தேதி வெளியிட வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அக்டோபர் 16 ஆம் தேர்வு முடிவுகள் வெளியாகுமெனவும், அதற்கான நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இந்நிலையில், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.ntaneet.nic.in என்ற வலைத்தளத்தில் காணலாம்.