பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்திய பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் இந்தியா-ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு நாடுகள் பொருளாதார பேரவை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் (Vladivostok) சென்றார் பிரதமர் மோடி.அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார்.பிரதமர் மோடி புட்டினுடன் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார்.
இந்நிலையில் விளாடிவாஸ்டாக் நகரில் இந்திய பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் இந்தியா-ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.சென்னை- விளாடிவோஸ்டாக் இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.