என்.டி.ஏ வலுவான அரசை அமைக்கும் .. – பிரதமர் மோடி உரை
மோடி: வருகிற ஜூன்-9ம் தேதி அன்று அவர் 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர செல்வதற்கு முன்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைவரான நட்டா இல்லத்தில் மோடி உட்பட என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.
அதனை தொடர்ந்து குடியரசு தலைவரான திரௌபதி மும்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு மோடி புறப்பட்டு சென்றார். அங்கு குடியரசு தலைவரான திரௌபதி முர்மு, ஆட்சியமைக்க மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து அங்கு உரையாற்றிய மோடி,”தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும். மேலும், 18-வது மக்களவை என்பது ஒரு புதிய தொடக்கத்திற்கு வித்திட்டுள்ளது
இதற்கு பிறகு வருங்காலத்திலும் இதே உத்வேகத்துடன் வழி நடத்துவேன். ஒரு வலுவான அரசாக தான் பாஜக தலைமையிலான அரசு இயங்கும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மாநிலங்களையும் சென்றடையும் மேலும் மேலும் இந்தியாவின் வளர்ச்சி தொடரும். நாட்டிற்காக நான் மேலும் கடினமாக உழைப்பேன்”, எனவும் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.