பரபரப்பாகும் டெல்லி அரசியல் களம்… அடுத்தடுத்த நகர்வுகள்…

Default Image

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிகளவு பரபரப்பாக இயங்கி வரும் இடமாக டெல்லி தற்போது மாறி வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் இன்று டெல்லியில் வெவ்வேறு இடங்களில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  • ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கார்கே இல்லத்திற்கு வந்துள்ளனர்.
  • I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் கார்கே இல்லத்தில் தற்போது தொடங்கியது.
  • நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர் என தகவல்.
  • NDA கூட்டம் முடிந்து பிரதமர் மோடி இல்லத்தில் இருந்து புறப்பட்டார் சந்திரபாபு நாயுடு.
  • NDA ஆலோசனை முடிந்த உடன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
  • நிதிஷ் குமாரை I.N.D.I.A கூட்டணிக்கு நாங்கள் அழைக்கவில்லை. வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். – ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் (I.N.D.I.A) கூட்டணி.
  • சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார்.
  • காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், கார்கே இல்லத்திற்கு வந்துள்ளார்.
  • பீகார் முதல்வரும் JDU தலைவருமான நிதிஷ்குமார் NDA கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டார்.
  • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு NDA கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டார்.
  • NDA ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறுகிறது. I.N.D.I.A ஆலோசனை கூட்டம் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்