வறுமையை காரணம் காட்டி காப்பத்தில் அடைப்பதா? காப்பக குழந்தைகளை குடும்பத்தில் ஒப்படைக்க- NCPCR அதிரடி உத்தரவு!

Published by
Kaliraj

நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகளை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- குடும்ப சூழ்நிலை வறுமை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகள்  வசித்து வருன்றனர். அவ்வற்றில் தமிழகம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா, மேகாலயா, மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்களில்  மட்டும் சுமார் 1.84 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் இக்குழந்தைகளை எல்லாம் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடியாக  நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 8 மாநில அரசுகளுக்கும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வறுமையை காரணம்  காட்டி ஒரு குழந்தையை குடும்பத்தில் இருந்து பிரித்து காப்பகங்களில் அனுமதிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும். வறுமை காரணமாக ஒரு குழந்தை காப்பகத்தில்  வசிக்கிறது என்றால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசின் தோல்வியையே  இது உணர்த்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் குழந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்கும் அளவுக்கு  குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டியது அந்தந்த  மாநில அரசுகளில் முதல் கடமை என்றும் காப்பகங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் நிலவுவதால் சம்பந்தப்பட்ட 8 மாநிலங்களில் குழந்தைகள் காப்பங்களில்  வசிக்கும் குழந்தைகளை அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கும் பணியினை 100 நாள்களுக்குள் மாநில அரசுகள் துவக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம்,  ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 தென் மாநிலங்கள் ஆணையத்தின் சார்பில் பல அமர்வில் கலந்து கொண்டு பல  ஆயிரக்கணக்கான குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு அளித்து, குழந்தைகள் காப்பகங்களில் நேரடி ஆய்வு செய்ததின் பயனில் இன்று  இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரித்துள்ளது.மேலும் இது தொடர்பாக விரைவில் இந்த 8 மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago