#BREAKING: என்.சி.பி. தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவிப்பு!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவிப்பு.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என என்சிபி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீரென அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்கால நடவடிக்கை குறித்து மூத்த தேசிய காங்கிரஸ் தலைவர்கள் குழு முடிவு செய்யும் எனவும் சரத் பவார் கூறினார். பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த சரத் பவார் முடிவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, அவர் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.