இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!

இது இந்தி மொழியை திணிப்பதற்காக அல்ல, மாறாக இந்திய கலாசாரத்தின் ஒருங்கிணைந்த அடையாளத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டதாக NCERT விளக்கியுள்ளது.

NCERT textbooks

சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை வெளியிடும் முக்கிய அரசு அமைப்பாகும். சமீபத்தில், NCERT ஆங்கில மொழி பாடநூல்களுக்கு இந்தி மொழியில் உள்ள பெயர்களை (ரோமன் லிபியில்) பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம், குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பு என்ற கண்டனம் தெரிவித்தனர். இந்திய கலாச்சாரத்தின் வேர், பன்மொழி, அனுபவக் கற்றல் மற்றும் கல்வி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மற்றும் மகாராஷ்டிராவில் ஐந்தாம் வகுப்பு வரை இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாகப் பயிற்றுவிப்பது குறித்த சர்ச்சை ஓயவில்லை, இப்பொது NCERT புத்தகங்களில் இந்தி தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை தொடங்கியது.

அதாவது, NCERT பல்வேறு வகுப்புகளுக்கான புதிய புத்தகங்களின் தலைப்புகளை இந்தியில் வழங்கியுள்ளது. 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில பாடப்புத்தகங்கள் ‘மிருதாங்’ (மிருதாங், ஒரு தென்னிந்திய இசைக்கருவி) என்று பெயரிடப்பட்டுள்ளன. 3 ஆம் வகுப்பு புத்தகத்தின் பெயர் ‘சந்தூர்’ (சந்தூர், ஒரு காஷ்மீர் நாட்டுப்புற இசைக்கருவி). 6 ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘ஹனிசக்கிள்’ என்பதிலிருந்து ‘பூர்வி’ (பூர்வி, ஒரு ராகத்தின் பெயர்) என மாற்றப்பட்டது.

இந்த நிலையில், புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 அடிப்படையில் இந்த பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சூற்றுசூழல், அறிவியல் அறிவினை வழங்குவதற்காக இந்தியில் பெயர் உருவாக்கப்பட்டுள்ளதாக NCERT விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்