35 கோடி மதிப்புள்ள என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் பறிமுதல்.. 12 பேர் கைது!
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட் காவல்துறையினருக்கு என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு, விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள், அங்கு புத்தகங்களை விற்பனை செய்து வந்த 12 பேரை கைது செய்துள்ளனர்.
அங்கு விற்கப்பட்டு வந்த புத்தகங்கள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். அந்த புத்தகம் அனைத்தும் ரூ.35 கோடி மதிப்புள்ளவை எனவும், புத்தகங்களை வைத்திருந்த குடவுன், புத்தகங்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இடமும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்.எஸ்.பி. அஜய் சஹானி தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சச்சின் குப்தாவை தேடும் பனியின் போலீசார் தீவிரமடைந்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட 12 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.