இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் பிரபுதேவா மற்றும் நயன்தாரா அடுத்த படத்தில் இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா இயக்கத்தில் இசாரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்க வுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிடங்களுக்கு நிதி திரட்டுவதற்காக இரட்டை ஹீரோ திட்டம் ஒன்றை எடுக்க போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். ‘இரட்டை ராஜா வெள்ளை ராஜா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் கார்த்தி மற்றும் விஷால் நடிப்பதாக கூறப்பட்டது.
மேலும் சில நாட்கள் படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட இந்த படம் கடைசியில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த படத்தை எடுக்க போவதாகவும், இதில் விஷாலுக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கார்த்தி நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…