ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்!
Haryana : பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார். ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஹரியானா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்தார்.
Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!
இந்த சூழலில் கூட்டணியில் திடீர் விரிசல் காரணமாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் இன்று காலை கூண்டோடு பதவி விலகினர். ஹரியானாவில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜேஜேஜே கட்சி வாபஸ் பெற்றதால், கூட்டணி ஆட்சி கலைப்பட்டு, புதிய கூட்டணி அமைத்து பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றவுள்ளதாக கூறப்பட்டது.
Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.!
அதன்படி, ஹரியானாவின் புதிய முதல்வர் பதவிக்கு நயாஸ் சைனி பெயரும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், பாஜக எம்ஏஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நயாப் சிங் சைனி ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.
இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்வில் நயாப் சிங் சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Read More – குஜராத்தில் ரூ.480 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. 6 பாகிஸ்தானியர்கள் கைது!
அதன்படி, புதிய முதல்வராக பொறுப்பேற்ற நயாப் சிங் சைனி முன்னாள் முதல்வர் கட்டாரிடம் வாழ்த்து பெற்றார். எனவே, பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள நயாப் சிங் சைனி, குருஷேத்ரா தொகுதி எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து, அவர் தலைமையிலான ஹரியானா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அதன்படி, கன்வர் பால் குஜ்ஜர், மூல்சந்த் சர்மா, சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சிங், ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரிலால் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.