பறவைகளால் கடற்படையின் மிக் 29 கே விமானம் விபத்து..!
கோவாவில் ஒரு மிக் -29 கே இரட்டை இருக்கைகள் கொண்ட விமானம் வழக்கமான பயிற்சி மேற்கொள்வதற்கு நேற்று நண்பகலில் டபோலிம் கோவாவில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா விமானத் தளத்திலிருந்து புறப்பட்டது.
அப்போது விமானதின் மீது பறவைகள் கூட்டமாக மோதி உள்ளது.இதனால் இடது என்ஜின் தீப்பிடித்ததையும், வலதுபுறம் தீப்பிடித்ததையும் விமானிகள் கவனித்தனர்.இதை தொடர்ந்து இரு விமானிகளும் பாராசூட்டுகள் மூலம் விமானத்தில் இருந்து குதித்தனர்.
இந்த விபத்து குறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில் , விமானிகள் கேப்டன் எம் ஷியோகண்ட் மற்றும் லெப்டன் சி.டி.ஆர் தீபக் யாதவ் ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தரையில் எந்தவிதமான உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என கூறினர்.
நேரில் பார்த்தவர்கள் ஒரு பெரிய புகை மூட்டத்தையும் , இரண்டு பாராசூட்டுகள் இறங்குவதையும் பார்த்ததாக கூறினார்.விமானிகள் ஒரு குடியிருப்புப் பகுதியில் தரையிறங்கிய பின்னர் அவர்களை உள்ளூர்வாசிகள் சிறப்பாக கவனித்து கொண்டதாக கூறினார்.