நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு…!!
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது.
தேசிய தேர்வு முகமையானது (NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 499 நகரங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது.
மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடந்த இந்த தேர்வில் மாணவ,மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சார்பார்க்கப்பட்ட பின்னரே தேர்வு எழுத உள்ளே அனுப்பப்பட்டனர். மேலும், நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20.9 லட்சம் பேர் தேர்வை எழுதினர், மேலும் தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் பேர் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.