BIG NEWS : நாடு முழுவதும் மே 4 -க்கு பிறகு முக்கிய அறிவிப்பு – ஊரடங்கு தளர்வா ?
ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதையெடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? அல்லது சில தளர்வுகள் இருக்குமா ? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சில மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்.அதில் கொரோனா தொற்று குறைவாக உள்ள பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் இருக்கும் என்றும், மேலும் இது தொடர்பான விவரங்கள் அடுத்த சில நாட்களில் தெரிவிக்கப்படும் என பதிவிட்டு உள்ளார்.
New guidelines to fight #COVID19 will come into effect from 4th May, which shall give considerable relaxations to many districts. Details regarding this shall be communicated in the days to come.#Corona Update#StayHomeStaySafe @PMOIndia @HMOIndia @MoHFW_INDIA
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) April 29, 2020