மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்!

Bharat Bandh

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் இன்று தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம், கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் மற்றும் மின்சார திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உள்ளிட்ட பல மாநில விவசயிகள் தேசிய தலைநகர் டெல்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் சலோ டெல்லி பேரணி இன்று நான்காவது நாளாக தொடர்கிறது. விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், பஞ்சாப்-ஹரியானாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி.. இணைய சேவை துண்டிப்பு.! தொடரும் விவசாயிகள் போராட்டம்…

இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், பல்வேறு தடுப்புகளை தாண்டி டெல்லியை நோக்கி விசாயிகள் முன்னேறி வருகின்றனர். இதில், விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.

இந்த சூழல், மத்திய பாஜக அரசின் கொள்கைகளை கண்டித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) என்ற விவசாய அமைப்பினர் மற்றும் மத்திய (BMS) தொழிற்சங்கங்கள் இன்று (பிப்.16) நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்த போவதாக அழைப்பு விடுத்திருந்தனர்.

விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த பாரத் பந்த் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. அதன்படி, இன்று காலை முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்